தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உதவிகேட்ட பாகிஸ்தான்; கைகொடுத்த இந்தியா!

டெல்லி: கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் லாக்டவுன் நடைமுறையில் உள்ள நிலையில், இந்தியாவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டினர் பாகிஸ்தான் திரும்ப இந்தியா உதவியுள்ளது.

india pak
india pak

By

Published : Apr 16, 2020, 5:18 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக இந்தியா கடுமையான லாக்டவுனை நாடுமுழுவதும் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் சிக்கிக்கொண்ட 41 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கோரிக்கை வைத்தனர்.

இதை உடனடியாக கருத்தில் கொண்டு இந்திய தூதரகம் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று அவர்கள் நாடு திரும்ப உடனடி ஏற்பாடு செய்துள்ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லையான பாஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லை பகுதிக்கு அவர்கள் அழைத்துவரப்பட்டு, சொந்த நாடு திரும்ப உதவி மேற்கொண்டுள்ளது.

இதன் தொடர்சியாக பாகிஸ்தானில் இந்திய நாட்டினர் 250 பேர் இந்தியா அழைத்துவரும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதில் 150 பேர் மாணவர்கள் எனவும், 100 பேர் சுற்றுலா சென்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட செய்தி மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா கொடுத்த செய்தியின் தமிழாக்கம்.

இதையும் படிங்க:கரோனா: உலக சுகாதார அமைப்புடன் கைகோர்த்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details