கரோனா வைரஸில், SARS-CoV-2 இன் மரபணு அம்சங்கள் இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் SARS-CoV-2 ஆய்வகத்தில் கட்டமைக்கப்பட்டது அல்ல அதற்கான சான்றுகளும் இல்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, ஒருவேளை கட்டமைக்கப்பட்ட வைரஸாக இருந்தால் மரபணு வரிசையானது நாம் ஏற்கனவே அறிந்த கூறுகளின் கலவையைக் காண்பித்திருக்கும், ஆனால் இதில் அப்படி எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாத தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட கரோனா வைரஸின் மரபணு வரிசை, ஜனவரி 11, 12 ஆகிய தினங்களில் உலக நாடுகளிடையே வெளிப்படையாக பகிரப்பட்டதையும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் சீனா தொடங்கி இதுவரை பரவிய அனைத்து நாடுகளிலுமுள்ள வைரஸின் மரபணு கட்டமைப்பை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில் இருந்து வௌவால்கள்தான் கரோனாவின் ஆரம்பப்புள்ளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, வௌவால்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான வைரஸ் பரவியதற்கு காரணமான விலங்கு இன்னும் கண்டறியப்படவில்லை, கரோனா விலங்கிலிருந்தே மனிதனுக்கு பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.