கரோனா பெருந்தொற்று உலகையை உலுக்கிவரும் நிலையில், இதை சமாளிக்க முடியாமல் சர்வதேச சமூகம் திணறிவருகிறது. இந்த வைரசின் பிறப்பிடமாக சீனா கருதப்படுகிறது. இந்த வைரஸ் வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகக் கூறிவரும் நிலையில், சீனாவின் வூஹான் பகுதியில் முதல் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பெருந்தொற்று தொடர்பாக சீனாவின் முன்னணி வைரஸ் நிபுணர், வௌவால் ஆராய்ச்சியார் ஒருவர் கூறியுள்ள கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வௌவால் பெண் எனப் பிரபலமாகக் கூறப்படும் ஷி ஜெங்லி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், இது போன்ற புதிராக உருவெடுத்துள்ள வைரஸ் வெறும் ஆரம்பம்தான். மிகப்பெரும் பனிப்பாறையின் உச்சிப் பகுதியை மட்டும்தான் நாம் கண்டுள்ளோம். முழுப்பனி இனிமேல்தான் வெளிவரும், இதுபோன்ற மேலும் பல தாக்குதல்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என பரபரப்பை கிளப்பும் விதமாகத் தெரிவித்துள்ளார்.