கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தெற்காசிய நாடான மியான்மரில் இதுவரை 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் காரணமாக ஆறு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், இந்தியா மியான்மருக்கு 2 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கியுள்ளது.
கோவிட்-19: மியான்மருக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா
நேபிதாவ்: கரோனா வைரஸ் நோய்க்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை மியான்மருக்கு வழங்கி இந்தியா உதவியுள்ளது.
Myanmar
அதுமட்டுமில்லாமல், கையுறை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் இந்திய தூதர் சவுரப் குமார், அந்நாட்டு சுகாதாரத் துறை அலுவலர்களிடம் வழங்கினார். இதுகுறித்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனாவுக்கு எதிரான போரில் மியான்மர் மக்களுடனும் அரசுடனும் இந்தியா துணை நிற்கும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியே இது. இரு நாட்டு நட்பு, கலாச்சார உறவை இது எடுத்துரைக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெனிசுலாவில் ஊடுருவ முயன்ற அமெரிக்கர்கள் கைது!