தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோவிட்-19 பெருந்தொற்று நோய் - உலக சுகாதார அமைப்பு - கொவிட்-19 பொருந்தொற்று நோய்

ரோம்: கோவிட்-19 வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

corona virus pandemic
corona virus pandemic

By

Published : Mar 11, 2020, 11:53 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ள கோவிட்-19 தொற்று குறித்து இன்று பேசிய உலக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெத்ரோல் ஆதனோம், "மிக வேகமாகப் பரவி வரும் கோவிட்-19 வைரஸ் பரவல், பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. இது அரசுகளின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. கோவிட்-19 வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என வகுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், 'உலக நாடுகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் வைரஸ் பரவலை தடுக்கலாம்' என தெத்ரோல் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கொரோனாவை எதிர்க்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறும்படம்!

ABOUT THE AUTHOR

...view details