காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கம் நிற்காமல், இந்தியாவின் பக்கம் நிற்கும் எந்த நாடும் பாகிஸ்தானின் எதிரி நாடாகவே கருதப்படும் என்றும் அப்படி இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தும் எனவும் பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத் துறை அமைச்சர் கில்கித் பல்திஸ்தான் அலி அமின் கந்தபூர் மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.
இந்தக் காணொலி பாகிஸ்தான் ஊடகவியலாளர் நைலா இனியாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் பேசியதை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தும், 'இந்தச் செய்தி கண்டிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சேரும் என நான் நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.