தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்திய-சீன பிரச்னை: இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை - இந்தியா சீனா எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல்

டெல்லி: கிழக்கு லடாக்கின் சுஷூலில் இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இருநாட்டு படைகளைத் திரும்பப் பெறுவதில் முக்கியக் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

corps-commander-level-talks-underway-between-india-and-china
corps-commander-level-talks-underway-between-india-and-china

By

Published : Jul 14, 2020, 5:42 PM IST

இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில், இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையேயான பேச்சுவார்தை நடைபெற்றுவருகிறது. இதில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கப்படும் என்று ராணுவ அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ உயர் அலுவலர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதற்கான செயல்முறையை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஜூலை 5ஆம் தேதி எல்லைப் பிரச்னை குறித்த கேள்விக்குப் பதிலளித்த இந்திய, சீனாவின் சிறப்புப் பிரதிநிதிகள், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெறும் பிரச்னையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோணத்தில் வெளிப்படையான மற்றும் ஆழமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதாகத் தெரிவித்தனர்.

ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்பந்தத்தின்படி, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இந்திய தரப்பும் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details