சீனா
கரோனா வைரஸ் நோயால் சீனாவில் மட்டும் மூன்றாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் ஹூபே நகரில் மட்டும் இரண்டு ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று 26 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், பலி எண்ணிக்கைய 106ஆக உயர்ந்துள்ளது.
ஹாங் காங்
சீனாவின் தன்னாட்சிப் பிராந்தியங்களுள் ஒன்றான ஹாங்காங்கில் எட்டு பேருக்கு கரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதன் காரணமாக, ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து
பசிபிக் தீவு நாடான தாய்லாந்தில் 73 வயது மூதாட்டி உள்பட14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் சீனர்கள் ஆவர்.
அமெரிக்கா
கரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்காவில் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவசியம் இல்லாம் மக்கள் யாரும் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, மலேசியா நாடுகளில் தலா நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தாய்வான், ஆஸ்திரேலியா, மகாவ் ஆகிய நாடுகளில் மொத்தம் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் மூன்று பேரும், கனடா, வியாட்நாம் ஆகிய நாடுகளில் தலா இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாள், கம்போடியா, ஜெர்மனியில் தலா ஒருவரும் பாதிப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் காரணமாக சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பதவி நீக்க விசாரணை: ஜான் போல்டன் முன்னிலையாக உத்தரவிடுமாறு வலியுறுத்தல்