சீனாவின் ஹுவாஷோங் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உயிர்கொல்லி வைரஸான கோவிட்-19 பரவல் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆய்வில் கரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவாது என்று தெரியவந்துள்ளது.
சீனாவின் வூகான் யூனியனில் உள்ள மருத்துவமனையில் கோவிட்-19 தொற்று காரணமாக, நான்கு கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்தப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.
எனினும் அக்குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நான்கு கர்ப்பிணி பெண்களில் ஒருவர் மட்டும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று இல்லை.
எனினும், ஒரு குழந்தைக்கு சொறி அறிகுறி தென்பட்டது. இரு குழந்தைகளுக்கு சிறிய அளவிலான சுவாசப் பிரச்னைகள் இருந்தது. தற்போது நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர். அக்குழந்தைகளின் தாய்மார்களும் நலமாக இருக்கின்றனர். அவர்கள் கோவிட்-19 (கரோனா) வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டனர்” என்றார்.