சீனா, அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்குத் துரிதமாக நுழைவு இசைவுச்சீட்டு (விசா) கிடைக்கும்வகையில் இந்திய அரசு இ-விசா என்னும் மின்னணு நுழைவு இசைவை அறிமுகப்படுத்தியது.
தற்போது சீனாவில் நிலைமை சரியில்லை. கரோனா வைரஸின் வீரியமான தாக்கம் காரணமாக அங்கு அறிவிக்கப்படாத சுகாதார அவசர நிலை நிலவுகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு வூகான் மகாணத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியத் தூதரகம் சார்பில் அவசர அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், சீனா, அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுவந்த மின்னணு நுழைவு இசைவுச்சீட்டு தற்காலிகமாக ரத்துசெய்யப்படுவதாகவும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.