தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தென் கொரியாவில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - south korea

சியோல்: கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் தென் கொரியாவில் இதுவரை 8 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronation
coronation

By

Published : Mar 17, 2020, 11:05 AM IST

சீனாவில் தன் வேட்டையை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்களுக்கு பீதியை ஏற்படுத்திவருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பால் 6 ஆயிரத்து 600 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் ஒரே நாளில் மட்டும் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென் கொரியா முழுவதும் இதுவரை 8 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 264 பேர் மட்டும் தற்போது சிகிக்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க:கனடாவிற்கு வெளிநாட்டு பயணிகள் வர தடைவிதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details