தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு

பெய்ஜிங் : சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.

Corona Virus, கொரோனா வைரஸ்
Corona Virus

By

Published : Feb 1, 2020, 11:44 AM IST

Updated : Mar 17, 2020, 5:27 PM IST

சீனா மற்றும் பல்வேறு உலக நாடுகளில் கரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து நேற்று (சனிக்கிழமை) சீனா தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், கரோனா வைரஸ் காரணமாக நேற்று 46 பேர் உயிரிழந்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நோயைக் கட்டுப்படுத்த சீனா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், அந்நாடு முழுவதும் 11 ஆயிரத்து 791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி சீனாவிலிருந்து இந்தியர்களை வெளியேற்றும் பணியில் வெளியுறவுத் துறை ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனா வைரஸ் தாக்குதல் - தற்காத்துக் கொள்வது எப்படி?

Last Updated : Mar 17, 2020, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details