தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகம் முழுவதும் ஒரு கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு - corona cases worldwide count

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

one crore corona cases worldwide
one crore corona cases worldwide

By

Published : Jun 28, 2020, 10:21 AM IST

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தற்போது பரவியுள்ளது. இவ்வாறு உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 25 லட்சத்து 96 ஆயிரத்து 403 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து பிரேசிலில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 941 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து மூன்றாவதாக ரஷ்யாவில் ஆறு லட்சத்து 27 ஆயிரத்து 646 பேருக்கும், நான்காவதாக இந்தியாவில் ஐந்து லட்சத்து 29ஆயிரத்து 577 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 625ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 54 லட்சத்து 53 ஆயிரத்து 247ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :470 மருத்துவ முகாம்கள்: 33ஆயிரத்து 341 பேருக்கு கரோனா டெஸ்ட்

ABOUT THE AUTHOR

...view details