தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை காலமானார்! - அணு

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர் கான் (Abdul Qadeer Khan) இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 85. அப்துல் காதிர் கான், பாகிஸ்தானில் 1970களில் அணு ஆயுத சோதனையை நிகழ்த்தினார்.

Abdul Qadeer Khan
Abdul Qadeer Khan

By

Published : Oct 10, 2021, 1:29 PM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நபரான அப்துல் காதர் கான் ஞாயிற்றுக்கிழமை நீண்ட உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

85 வயதான அப்துல் காதிர் கான், 1970களின் தொடக்கத்தில் அணு ஆயுத சக்தியாக பாகிஸ்தானை மாற்ற விரும்பினார். இவர், 1970களில் நெதர்லாந்தில் இருந்து பாகிஸ்தான் திரும்புவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கினார். அங்கு அவர் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தார்.

பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை

சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் நடத்திய ஆராய்ச்சியின் படி, இவர் பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதத்தை உருவாக்கப் நெதர்லாந்திலிருந்து யுரேனியம் செறிவூட்டல் தொழில்நுட்பத்தைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

பெல்ஜியத்தில் உள்ள லூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் உலோகவியல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற கான், அண்டை நாடான இந்தியா தனது முதல் அமைதியான அணு குண்டு சோதனையை நடத்திய பிறகு பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தை 1974இல் தொடங்க முன்வந்தார்.

புல் சாப்பிட்டாலும் அணு குண்டு....

பாகிஸ்தானின் சொந்த அணு ஆயுதத் திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக அவர் அப்போதைய பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை அணுகினார்.

1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் உருவான நிலையில் கானின் ஆலோசனையை பூட்டோ ஏற்றுக்கொண்டார். அப்போது அவர், “பாகிஸ்தானியர்கள் புல் சாப்பிடுவோம், பசியோடு கூட இருப்போம், ஆனால் எங்களிடம் சொந்தமாக (அணுகுண்டு) இருக்கும்” என்றார்.

அப்போதிலிருந்து, பாகிஸ்தான் தனது அணு ஆயுதத் திட்டத்தை இடைவிடாமல் பின்பற்றி வருகிறது. எனினும், பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் மற்றும் கானின் ஈடுபாடு நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு உள்பட்டது.

சர்ச்சை

1990 களில் வாஷிங்டன் தனது அணு ஆயுதத் திட்டத்திற்கு பாகிஸ்தானை அனுமதித்த பிறகு, அண்டை நாடான ஈரானுக்கும் வட கொரியாவுக்கும் அணு ரகசியங்களை வர்த்தகம் செய்ததாக கான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பின் போது 10 ஆண்டுகளாக, அடுத்தடுத்த அமெரிக்க அதிபர்கள் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்று சான்றளித்தனர். எனினும் பாகிஸ்தானுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானில் கான் ஒரு ஹீரோவாகவும், அணுகுண்டின் தந்தையாகவும் அறிவிக்கப்பட்டார். தீவிர மதக் கட்சிகள் அவரை “இஸ்லாமிய அணுகுண்டின் தந்தை” என்று அழைத்தன.

இம்ரான் கான் இரங்கல்

பாகிஸ்தானின் சர்வாதிகாரி அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் 2001 க்குப் பிறகு கானை நிராகரித்தார். அப்போது கான் அணு ரகசியங்களை விற்றதாக கூறப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், அப்துல் காதர் கான் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துவந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரை “தேசிய அடையாளம்” என்று வர்ணித்துள்ளார். மேலும், “அண்டை நாட்டுக்கு எதிரான எங்கள் பாதுகாப்பை உறுதி செய்தவர்“ என்றும் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க :உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு அணுகுண்டுகள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details