தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ராணுவ எழுச்சி காணும் சீனா - யாரை எச்சரிக்கிறது?: ஓர் அலசல்! - தியனன்மென் சதுக்கம்

சீனாவின் அச்சுறுத்தும் ராணுவ எழுச்சி குறித்து நம் ஈடிவி பாரத்துக்கு கர்னல் தன்வீர் சிங் எழுதிய கட்டுரை இதோ உங்கள் பார்வைக்காக

china president

By

Published : Oct 3, 2019, 11:08 PM IST

70வது சீன தேசிய தினத்தை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற தியான்மென் சதுக்கத்தில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி, உலக அமைதி ஆகியவற்றைப் பாதுகாப்பதில் சீன ராணுவம் உறுதியாகவுள்ளது" என்றார். மேலும், "நம் ஆகச் சிறந்த நாட்டின் அஸ்திவாரத்தை யாராலும் அசைக்கமுடியாது" என கர்ஜித்தார்.

இதன் மூலம், ஆதிக்க சக்தியான அமெரிக்காவுக்கும், எதிரி நாடுகளுக்கு தெள்ளத்தெளிவாக ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கையை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 1990களிலிருந்து ராணுவ நவீன மயமாக்கலில் மும்முரம் காட்டிவரும் சீனா, 2035க்குள் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் சக்திவாய்ந்த ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அதிதீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி, 160க்கும் அதிகமான போர் விமானங்கள், 580 ராணுவ ஆயுதங்கள், கருவிகளும் இந்த பிரமாண்ட அணிவகுப்பில் கலந்துகொண்டன.

இதையும் படிங்க: உலகின் மிக பிரமாண்டமான ராணுவ அணிவகுப்புக்குத் தயாராகும் சீனா!

அணிவகுப்பில் கலந்துகொண்ட குறிப்பிடத்தக்க ஆயுதங்களைப் பார்ப்போம்

:

ட்எஃப் -17

சீன ராணுவத்திடம் உள்ள டிஎஃப்-17 ஏவுகணை தளவாடம் மிகவும் சக்தி வாய்ந்தது. மணிக்கு சுமார் 3 ஆயிரத்து 800 கி.மீ., (அதாவது ஒலியைவிட ஐந்து மடங்கு) வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இந்த தளவாடம் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதங்களை ஏவும் வல்லமைப் படைத்த இந்த டிஎஃப்-17, அமெரிக்கா, அதன் பசிபிக் நட்புநாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

கொங்ஜி-11

கொங்குஜி-11 எனப்படும் ஆளில்லா விமானம் இலங்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கக்கூடியது. மேலும், இதனை ரேடார் உள்ளிட்ட கருவிகளால் கூட கண்டறியமுடியாத அளவிற்கு இது கள்ளத்தனமாக மறைந்து செயல்படக்கூடியது. இந்த வகை ஆளில்லா விமானங்கள் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு சவாலாக அமையும்.

டிஆர்-8

ஒலியை விட அதிவேகத்தில் செல்லக்கூடிய டிஆர்-8 ஆளில்லா விமானம், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரிகளை உளவுப் பார்த்துவிட்டு அதுகுறித்து தகவலை எஃப்-17, ஷார்ப் ஸ்வாட் உள்ளிட்ட ஏவுகணை தளவாடங்களுக்கு அனுப்பும் திறன் படைத்தது.

டிஎஃப்-41
சீனாவின் உள்ள டிஎஃப்-41 ஏவுகணைத் தளவாடம் உலகின் மிகச் சக்திவாய்ந்த ஏவுகணை தளவாடமாகப் பார்க்கப்படுகிறது. ஒரேநேரத்தில் பத்து அணு ஆயுத ஏவுகணைகளைச் சுமந்து செல்லக்கூடிய இந்த டிஎஃப்-41, ரஷ்யாவின் எஸ்எஸ்-18 சாத்தான் ஏவுகணை தளவாடத்தை விஞ்சும் திறன் படைத்தது. அமெரிக்காவிடம் உள்ள ஏவுகணை தளவாடங்களால் அதனை நெருங்கிக் கூட முடியாது.

மறைந்திருந்து தாக்கக் கூடிய ஐ-20 போர் விமானம், ஹெச்-6ன் குண்டு பொழியும் வானூர்தி, கப்பலைத் தாக்கி அழிக்கக்கூடிய ஒய்ஜே-18 சூப்பர்சோனிக் சீர் வேக ஏவுகணை மற்றும் டிஎஃப்-26 ஏவுகணைகளும், பீரங்கிகளும் அணிவகுப்பில் அதிகளவில் காணப்பட்டன.

தியான்மென் ராணுவ அணிவகுப்பு சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், தைவான், தென் கொரியா, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளுக்கு ஓர் மறைமுக எச்சரிக்கையாக அமைந்துள்ளது. சீனாவின் ராணுவ எழுச்சியை இந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை என்றால், அதனால் வரப்போகும் அபாயங்களை இந்த நாடுகள் சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க: விஷப் பரீட்சை : சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது ?

ABOUT THE AUTHOR

...view details