தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தான் விமான விபத்து

டெல்லி : ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

plane crash cia officer dead, ஆப்கானிஸ்தான் விமான விபத்து, சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் மரணம்
plane crash cia officer dead

By

Published : Jan 28, 2020, 6:27 PM IST

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானியின் கொலைக்கு காரணமான மைக்கேல் தே ஆன்ரே உள்ளிட்ட பல மூத்த சிஐஏ அலுவலர்கள் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த மூன்றாம் தேதி அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்து போர் மூலம் சூழலை உருவாக்கியது.

பின்னர், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து மோதல் தற்காலிகமாக தணிந்துள்ளது.

இதையும் படிங்க :ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்காவுக்குச் சொந்தமானது - தலிபான்

ABOUT THE AUTHOR

...view details