உலகிலேயே அதிகம் கடத்தப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக பாங்கோலின்கள் (ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) கருதப்படுகிறது.
இந்த விலங்குகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் மருத்துவ குணத்துக்காகவும், உணவு உற்பத்திக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன.
தென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான ஒரு ஆய்வின்படி, பாங்கோலின்களிலிருந்து பிரிக்கப்பட்ட திரிபு மரபணு வரிசையானது 99 விழுக்காடு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒத்ததாக இருந்தது.
இது பாங்கோலின்கள் வைரஸின் ஹோஸ்டாக இருக்கலாம் என உணர்த்துகிறது. இதுவரை ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூகானிலும் கரோனா வைரஸால் இறந்தோரின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,143 ஆக உள்ளது. இந்நிலையில் பாங்கோலின்களில் உள்ள பீட்ட கரோனா வைரஸின் நேர்மறை விகிதம் 70 விழுக்காடு என்று மூலக்கூறு உயிரியல் கண்டறிதல் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வைரஸை தனியாக பிரித்து அதனுடைய கட்டமைப்பை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope) மூலம் ஆய்வு செய்தனர்.
இந்த வைரஸின் மரபணு வரிசை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 99 விழுக்காடு ஒத்திருந்ததாத தெரியவந்துள்ளது. இதையடுத்து வெளிநாட்டிலிருந்து வரும் விலங்குகளை வர்த்தகம் செய்ய சீன அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
இதற்கு முன்பாக பாம்புகள் வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனோ வைரஸ்: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சீன பயணம் ரத்து