தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உயிரைப் பறிக்கும் கரோனா;- பதுங்கிய சீன அதிபர்... கோபத்தில் மக்கள்! - corona virus issue

பெய்ஜிங்: கோரானா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மாயமான சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசியமாக தஞ்சம் அடைந்திருப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அவர்மீது பொதுமக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர் .

சீன அதிபர்
சீன அதிபர்

By

Published : Feb 10, 2020, 6:30 PM IST

Updated : Mar 17, 2020, 6:13 PM IST

சீனாவில் கரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. உலகளவில் தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் வைரஸூக்கு மருந்து உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் உயிரை கரோனா வைரஸ் பறித்துள்ளது. இச்சமயத்தில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதிபர் ஜி ஜின்பிங், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதற்குப் பிறகு பொதுநிகழ்ச்சியில் அவர் கலந்துக்கொள்ள வில்லை.

அரசாங்க பொறுப்பில் சீன அதிபருக்கு அடுத்தப்படியாக இருக்கும் லீ கெக் யாங் தான் கரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்புகள், மக்களைச் சந்தித்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கரோனா பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக ரகசிய இடத்தில் தஞ்சம் அடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையறிந்து பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மக்களுக்கான பிரதிநிதி மக்களை கண்டுகொள்ளாமல் மறைந்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 908 ஆக உயர்வு!

Last Updated : Mar 17, 2020, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details