தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"மருத்துவமனையில் நாற்காலி இல்லை" தவித்த கர்ப்பிணி மனைவிக்கு நாற்காலியாக மாறிய கணவர்! - Chinese man change to chair for preganant wife at china

சீனா: மருத்துவமனையில் நாற்காலி இல்லாமல் தவித்த கர்ப்பிணி மனைவிக்காக, கணவர் நாற்காலியாக மாறிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

preganant wife
தவித்த கர்ப்பிணி

By

Published : Dec 7, 2019, 10:37 PM IST

கணவரின் அன்பிற்காக ஏங்கும் பெண்கள் மத்தியில், அவர்களே பொறாமைப்படும் அளவிற்குச் சீனாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சீன நாட்டை சேர்ந்த கணவர், தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, மருத்துவரின் அறைக்கு வெளியே தங்களைக் கூப்பிடும்வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் நாற்காலிகளிலும் மக்கள் அமர்ந்திருந்ததால், நிற்க முடியாமல் கஷ்டப்பட்டு அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

தனது மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை பார்த்து, என்ன செய்யலாம் என யோசித்த கணவருக்கு திடீர் யோசனை உதித்துள்ளது. அவர் உடனடியாக, தரையில் அமர்ந்துகொண்டு, தனது முதுகில் மனைவியை அமர வைத்தார். இந்த நிகழ்வை மருத்துவமனையிலிருந்த ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: காது கேட்காத குழந்தை தாயின் குரலை முதன்முதலாகக் கேட்கும் க்யூட் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details