டெல்லி:சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இன்று (மார்ச் 24) மாலை இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து நாளை (மார்ச் 25) பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் சந்திப்பின் போது, ரஷ்யா-உக்ரைன் போர், இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி, இரு நாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைதொடர்ந்து இந்தியா- சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த சம்வத்திற்கு பிறகு, சீனாவின் உயர்மட்ட துறை அலுவலர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி, வாங் யீயின் சந்திப்பு குறித்து தகவல் இல்லை.