உலகிலேயே அதிக மக்கள்தொகை
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா நீண்ட நாள்களாக திகழ்ந்துவருகிறது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சீனாவில், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, கடுமையான குடும்பக் கட்டுப்பாடு விதிகள் உள்ளன. முன்னதாக, தம்பதி ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் வீட்டிற்கு சீல் வைத்து சிறை தண்டனை, அபராதம் என்ற அளவிற்கு கட்டுப்பாடு விதிகள் அமைக்கப்பட்டிருந்தது.
தலைகீழான நிலைமை
சீனாவின் இந்த குடும்ப கட்டுப்பாடு விதிமுறைகள் அவர்களுக்கு தற்போது சிக்கலை உருவாக்கியுள்ளது. அந்நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை பெருகிவரும் சூழலில், வேலைக்கு செல்லும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை பெரும் சரிவைக் கண்டுள்ளது. இதன் தாக்கமாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குள்ளாகும் அபாயம் எழுந்துள்ளது.