சீன வளர்ச்சி வங்கி, சீன எக்ஸிம் வங்கி, சீன கமர்ஷியல் வங்கி (ஐசிபிசி) ஆகியவை தீர்மானத்திட்டத்தின்படி, ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 30 விழுக்காடு அல்லது ரூ.7,000 கோடி பங்கைபெறலாம். ஆனால், பங்கைப்பெறும் உத்தேச திட்டம் தொடர்ந்தால் தொலைத்தொடர்புத் துறைகளிடமிருந்து எதுவும் பெறமுடியாது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மறுபுறம், சீன வங்கிகள் சுமார் ரூ.7,000 கோடி (30 விழுக்காடு) கணிசமான பங்குடன் விலகிச் செல்லலாம், அதே நேரத்தில் பிற வெளிநாட்டு கடன் வழங்குநர்களுக்கு ரூ.2,300 கோடி (10 விழுக்காடு பங்கு) மற்றும் எஸ்பிஐ மற்றும் இந்திய வங்கிகள் தற்போதைய திட்டத்தின் கீழ் கிடைக்கும் தொகைகளிலிருந்து ரூ.13,000 கோடி கிடைக்கும்.