உலகம் முழுதவதும் கரோனா வைரஸ் தாக்கம் தற்போது தீவிரமாக உள்ள நிலையில், அந்த நோயின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.
அந்த நாட்டில் நோய் பாதிப்பின் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
அங்கு கடுமையான முயற்சிக்குப் பின் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது சீனாவைச் சேர்ந்த யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என அறிவித்த சீனா, வெளிநாட்டு பயணிகளால் வைரஸ் வருவதைத் தடுக்கும் விதமாக விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களாக முடங்கிக்கிடந்த சீனாவின் தொழில் துறை தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. உருக்கு உற்பத்தி, ஆட்டோ மொபைல் வாகன உற்பத்தி என அனைத்து தொழில்துறைகளும் சீனாவில் செயல்படத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சரிந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுப்போம் எனவும் அந்நாடு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பால் பரிதவிக்கும் ஆப்பிரிக்க நாடுகள்