தமிழ்நாடு

tamil nadu

நிலவில் தரையிறங்கவுள்ள சீனாவின் ஆளில்லா விண்கலம்!

By

Published : Nov 30, 2020, 4:13 PM IST

பெய்ஜிங்: நிலவிலிருந்து கற்களை எடுத்துவர, சீனா அனுப்பிய ‘சேஞ்ச்-5’ என்கிற ஆளில்லா விண்கலம், நிலாவில் தரையிறங்கவுள்ளது.

சீனா
சீனா

நிலவில் முதன் முதலில் (1969ஆம் ஆண்டு) கால்பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து பெரிய கற்கள், மணல் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். பின்னர், 1976இல் ரஷ்யா ‘லூனா 24’ என்ற ஆள் இல்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி 170 கிராம் கற்களை அங்கிருந்து கொண்டுவந்தது. இந்தக் கற்கள் மூலம் நிலவின் நிலப்பரப்புத் தன்மை, தோற்றம் ஆகியவை ஆய்வுசெய்யப்பட்டது.

தற்போது மூன்றாவது நாடாக சீனா ஆள் இல்லாத விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. ‘சேஞ்ச்-5’ என்ற பெயர்கொண்ட இந்த விண்கலம் பெரிய ராக்கெட் மூலம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி 4.30 மணியளவில் ஹைனானில் உள்ள வென்சாங் விண்கலம் மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. சேஞ்ச்-5 விண்கலம், நிலவிலிருந்து கற்களை பூமிக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த விண்கலம் சுமார் 20 நாள்கள் நிலவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று, இந்த ஆளில்லா விண்கலம் நிலவில் தரையிறங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நிலவில் தரையிறங்கும் இந்த விண்கலம், தானாகவே கற்களை பூமிக்கு எடுத்துவரும் வகையில் வடிவமைத்துள்ளனர். விண்கலம் எவ்வித தடையின்றி சிறப்பாகச் செயல்படுகிறது என்றும், தரை கட்டுப்பாட்டுடன் தொடர்பில்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details