சீன அரசுடன், வுசாங்க் கப்பல் கட்டும் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக புதிய படகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தது. இந்த படகை ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும் என வுசாங்க் நிறுவனத்திற்கு, சீன அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட திறன் கொண்ட படகு தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது.
நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை உருவாக்கி சீனா சாதனை.... - 200 km travel
பெய்ஜிங்: உலகத்திலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது. இந்த படகை ராணுவ பயன்பாட்டுக்கு உபயோகிக்க உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், இந்த புதிய தாக்கும் திறன் கொண்ட படகுக்கு ’மரைன் லிசார்ட்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இதற்கான சோதனை ஓட்டத்தை சீன அரசு மேற்கொண்டது. தற்போது இந்த சோதனை ஒட்டம் வெற்றியடைந்ததையடுத்து ,உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய திறன் பெற்ற படகை தயாரித்த முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
சீனாவின் ’மரைன் லிசார்ட்’ படகில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செயற்கைகோள் மூலமும் இந்த படகை இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இந்த படகை நிலத்தில் அதிகபட்சமாக 200கி.மீ தொலைவு வரை இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.