தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவை ஒடுக்க நினைத்தால் தக்க பதிலடி: எச்சரிக்கும் ஜின்பிங்க்! - Xi

சீனா யாரையும் ஒடுக்க நினைக்கவில்லை, ஆனால், சீனாவை ஒடுக்க நினைப்பவர்கள் 1.4 பில்லியன் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட சீனப் பெருஞ்சுவரில் மோத வைக்கப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ஜின்பிங்க் தெரிவித்துள்ளார்.

China will not be bullied, Xi tells CCP centenary crowd
சீனாவை ஒடுக்க நினைத்தால் தக்க பதிலடி: எச்சரிக்கும் ஜின்பிங்க்

By

Published : Jul 2, 2021, 9:34 AM IST

பீஜிங்:சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழா நேற்று (ஜூலை.01) நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டையொட்டி அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடந்தது. இந்த விழாவில் சீன அதிபர் ஜின்பிங்க் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, "வெளிநாட்டு சக்திகள் தங்களை ஒடுக்கவோ, கொடுமைப்படுத்தவோ, அடிமைப்படுத்தவோ சீன மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை, நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.

மேலும், எங்களை ஒடுக்க நினைப்பவர்கள், 1.4 பில்லியன் மக்களால் கட்டியெழுப்பபட்ட சீனப் பெருஞ்சுவரில் மோத வைக்கப்படுவார்கள். சீன மக்கள் ராணுவத்தை உலகத் தரம் வாய்ந்த ராணுவமாக மாற்றுவோம். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, நலன்களைப் பாதுகாக்க எங்களிடம் இன்னும் வலுவான, நம்பகத்தன்மை வாய்ந்த வழிகள் உள்ளன" என்றார்.

இதையும் படிங்க:’அவமதித்த அமெரிக்காவுடன் இனி கூட்டணி இல்லை’ - பாகிஸ்தான் பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details