சீனாவில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் பல உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. பல முன்னணி நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கரோனா தடுப்பூசி மருந்து தயாரித்தவுடன் அனைத்து நாடுகளுக்கும் விநியோகம் - சீன அமைச்சர்!
பெய்ஜிங்: கரோனா வைரசுக்குத் தடுப்பூசி மருந்து தயாரித்து விட்டால் உலக நாடுகள் அனைத்திற்கும் விநியோகம் செய்வோம் என, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஜிகாங் உறுதியளித்தார்.
இந்நிலையில், சீன விஞ்ஞானிகளும் மருந்து தயாரிப்பில் தீவிரமாக களமிளங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஜிகாங் கூறுகையில்," தடுப்பூசி மேம்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பில் சீனா ஈடுபட்டுள்ளது.
கரோனா வைரசுக்குத் தடுப்பூசி மருந்து தயாரித்து விட்டால் உலக நாடுகள் அனைத்திற்கும் உடனடியாக விநியோகம் செய்வோம். சீன அரசு கரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மறைக்க வில்லையென்றும், சரியான நேரத்தில் வெளிப்படையான முறையில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.