பெய்ஜிங்: சீனா கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கும் பட்சத்தில், உடனடியாக அதனை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்துவோம் என சீன அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்புடன் சீனா ஈடுபட்டுள்ளது என்று அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் வாங் ஜிகாங் தெரிவித்தார்.
மேலும், நோய்க்கிருமித் தொற்று குறித்த வெளிப்படையான தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது என்றும் கூறினார். சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான அறிக்கைகளை, உலக சுகாதார மையத்திடம் அவ்வப்போது அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
சீனா நோய்க்கிருமித்தொற்று குறித்து வெளிப்படையான தகவல்களைத் தரவில்லை என உலக சுகாதார மையம் வருத்தம் தெரிவித்திருந்தது.
ஆனால், தற்போது தொற்று நோய்க் கிருமியின் தாக்கம் குறித்த அனைத்துத் தகவல்களும் அடங்கிய அறிக்கையை, உலக சுகாதார மையத்திடம் வழங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.