2018ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போர் நடைபெற்றுவருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் முடிவெடுத்ததையடுத்து, சீரான இடைவெளியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் விளைவாக, சீனா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் அறிவித்தார்.
அமெரிக்கா - சீன அதிகாரிகளிடையே 10 வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு! - நிறைவு
பெய்ஜிங்: அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் ஒராண்டுக்கும் மேலாக தொடரும் நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்ற பத்தாவது கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
அதன்படி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரு நாட்டு மூத்த அதிகாரிகளும் இதனை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பத்தாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இ்ரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் நீண்ட நாட்களாக நீடித்துவந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு கூடிய விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.