தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்: பழைய மாதிரி படம் பார்க்க முடியுமா? - பழைய மாதிரி படம் பார்க்க முடியுமா?

ஷாங்காய்: கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மூடப்பட்ட திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன.

சீனாவில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்கங்கள்
சீனாவில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்கங்கள்

By

Published : Mar 27, 2020, 3:12 PM IST

சீனா தற்போது கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மீண்டு, பழைய நிலைக்குத் திரும்புகிறது. இந்நிலையில், மக்களை இயல்புநிலைக்கு திருப்ப திரையரங்குகளை ஒரு கருவியாக எடுத்திருக்கிறது சீன அரசு.

இரண்டு மாதங்களாக மூடிக்கிடந்த திரையங்குகள் நாளைமுதல் திறக்கப்படும் என ஷாங்காய் நகரத்தின் செய்தித் தொடர்பாளர் யென் ஜின் (Yin Xin) தெரிவித்திருக்கிறார்.

700 முதல் 800 திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் நகரத்தில் 380 திரையரங்குகள் செயல்படும். மற்ற திரையரங்குகள் விரைவில் மீண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய மாதிரி படம் பார்க்க முடியுமா?

மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை சந்திக்காமலிருக்க திரையரங்குகள் சில நெறிமுறைகளுடனே திறக்கப்படவுள்ளன. நோய்த்தொற்றிற்கான தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னரே பார்வையாளர்கள் திரையரங்கிற்குள் அனுப்பப்படுவார்கள்.

உள்ளே நுழைவதற்கு முன்பாக வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். முகக்கவசங்கள் அணிந்துதான் படம் பார்க்க வேண்டும். ஒரு இருக்கைக்கு அடுத்து இடைவெளிவிட்டுதான் அடுத்தவர் அமர வேண்டும்.

இதையும் படிங்க: கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை முடுக்கிவிடும் தலிபான்

ABOUT THE AUTHOR

...view details