கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதையொட்டி அரசின் மூன்று முகமைகள் வனவிலங்கு வர்த்தகத்துக்கு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர். உஹான் மாநகரில்தான் இந்த வைரஸ் மிகத் தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து பரவுகிறது.
இந்நிலையில், வனவிலங்கு வர்த்தகத் தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை, இணையதளம் என எதன் மூலமாகவும் வனவிலங்குகளை வாங்கவோ விற்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களின் உடமைகளுக்கு சீல்வைக்கப்படும். நாட்டில் வைரஸ் பரவுவது ஓய்ந்து சுமுகமான நிலை திரும்பும்வரை இந்தத் தடை இருக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.