கரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டாலும், அந்நாட்டு அரசு எடுத்த துரிதமான நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பரவல் வெகு விரைவில் கட்டுக்குள் வந்துவிட்டது. மேலும், மற்ற நாடுகளைப் போல இல்லாமல் கரோனா இரண்டாம் அலை ஏற்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துவருகிறது.
இந்நிலையில், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்கள் மூலம் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும்வகையில், இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருள்களுக்கும் கரோனா பரிசோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுவருகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் 10 ஆயிரம் உணவுப் பெட்டிகளில் 0.048இல் கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.