கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் வூஹான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து பல நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கரோனா வைரஸ், தற்போது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
18 மாகாணங்களில் டெல்டா வகை கரோனா
கரோனா தொற்றை கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்த சீனா, தற்போது டெல்டா கரோனாவால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்கு 18 மாகாணங்களில் டெல்டா கரோனா பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாள்களில், பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் உட்பட 18 மாகாணங்களில், 300க்கும் மேற்பட்டோருக்கு டெல்டா கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜாங்ஜியாஜி சுற்றுலா தளத்திலிருந்து பெய்ஜிங் திரும்பிய மூவருக்கு, கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
சுற்றுலா பயணிகளுக்கு கரோனா பரிசோதனை
கரோனா பாதிப்பு உள்ள மாகாணங்களிலிருந்து ரயில், விமானம், வாகனங்கள் வழியாகப் பொதுமக்கள் பெய்ஜிங் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.