சீனாவின் கடந்த டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்த கொவிட்-19 என்ற தொற்றுநோய், அந்நாடு முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக, பாதிப்பின் மையப்புள்ளியாகக் கருதப்படும் வூஹான் மாகாணத்தில் அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில், இந்த வைரஸால் ஏற்பட்ட உடல் உபாதைகள் காரணமாக, நேற்று மேலும் 105 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், பலி எண்ணிக்கை ஆயிரத்து 700ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 48 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெறிச்சோடியாக வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சீன காவலர்கள் சீனாவுக்கு வெளியே இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தைவானில் நேற்று முதல் உயிரிழப்பு நிகழ்ந்தது. உயிரிழந்த நபர் சமீப காலத்தில் வெளிநாட்டுக்கு எங்கும் பயணிக்கவில்லை என்றும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் இவருக்குத் தொடர்பு இல்லை எனவும் தைவான் சென்ட்ரல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 'அடுத்து வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட ஆயத்தமாகுங்கள்'- ஜே.பி. நட்டா