பெய்ஜிங்:சீனாவில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குநர் செங் ஈஜிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீனாவின் கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக பேசிய அவர், "முதல் கட்டமாக கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்பு அனைத்து பொது மக்களுக்கும் செலுத்தப்படும். தடுப்பூசி உற்பத்திக்கு ஏற்ப அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. பிப்ரவரி மாதம் சீனப் புத்தாண்டின் போது, மக்கள் தங்களது வீட்டிலிருந்தே புத்தாண்டினைக் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.