ஹாங்காங், உய்குர் இஸ்லாமியர்கள் அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீனா, அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை சீனா அமல்படுத்தியது.
இது ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல் எனக் கூறி அமெரிக்க அரசு 11 சீன உயர் அலுவலர்கள் மீது தடை நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன அரசு அமெரிக்க மேலவை அலுவலர்கள் உள்ளிட்ட 11 உயர் அலுவலர்கள் மீது தடை நடவடிக்கையை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜின் தெரிவித்துள்ளார்.