சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது.
சீனாவில் இதுவரை, கொரோனா தொற்றால் 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன.
சீனாவில் இதுவரை 76 ஆயிரத்து 288 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிலையில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் புதிய எண்ணிக்கை 397 ஆக குறைந்துள்ளது.
தென் கொரியாவில் 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. அங்கு பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென் கொரியாவில் தலைதூக்கும் கொரோனா - மேலும் 142 பேர் பாதிப்பு