தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது' - சீனா

பெய்ஜிங்: கொரோனா வைரஸால் புதிதாக வெறும் 397 நபர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

china corona virus, கொரோனா வைரஸ்
china corona virus

By

Published : Feb 22, 2020, 11:20 AM IST

சீனாவில் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) என்ற தொற்று நோய் பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அந்நாட்டின் ஹூபே மாகாணத்தில் தொற்றிய கொவிட் வைரஸ், பல்வேறு பகுதிகளில் பரவி இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது.

இந்த வைரஸால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி கொவிட்-19 வைரஸால் புதிதாக வெறும் 397 நபர்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 109 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், அந்நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 288ஆகவும், பலி எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 345ஆகவும் உள்ளது.

இதனிடையே, தென் கொரியாவில் நேற்று மட்டும் 204 பேருக்கு கொவிட்-19 ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : தடம் புரண்ட ஆஸ்திரேலிய ரயில் - இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details