தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்ரம்பின் மத்தியஸ்தம் தேவையில்லை - நிராகரித்த சீனா - Trump's mediation offer

Donald Trump
Donald Trump

By

Published : May 29, 2020, 2:22 PM IST

Updated : May 29, 2020, 2:54 PM IST

14:17 May 29

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மத்தியஸ்தம் தேவையில்லை என சீனா நிராகரித்துள்ளது. முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையேயான பூசலுக்கு மத்தியஸ்தம் செய்வதாக அதிபர் ட்ரம்ப் தாமாக முன்வந்து ட்விட்டரில் பதிவிட்டார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு சீனாவின் வெளியுறவுத்துறை தற்போது பதிலளித்துள்ளது. இது குறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சஹோ லின்ஜான் பேசுகையில், "இந்தியா - சீனா எல்லை விவகாரத்தை இரு நாடுகளுமே பேசி தீர்த்துக்கொள்ளும். இந்த விவகாரத்தில் மூன்றாம் நபரின் தலையீடு தேவையில்லை. இரு நாடுகளுக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தை நடத்த வழிவகைகள் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை சீனா குவித்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லைப் பகுதிகளான அருணாச்சல பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகியவை பொதுவாக லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் எனக் குறிப்பிடப்படும். கடந்த சில நாட்களாக எல்லைப் பகுதிகளில் ராணுவத்தை குவித்து தேவையற்ற சலசலப்பை சீனா ஏற்படுத்திவருகிறது. 

இதையும் படிங்க:தடுப்பு மருந்தாலும் கரோனவை அழிக்க முடியாது - அதிர்ச்சித் தகவல்

Last Updated : May 29, 2020, 2:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details