இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, “கடந்த 1967ஆம் ஆண்டு தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, சீனா அதனோடு நெருங்கிய தோழமையாக உள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை நல்கும் மிகவும் வெற்றிகரமாக செயலாற்றிவரும் ஆசியானோடு கடந்த 2020ஆம் ஆண்டில் முதல் முறையாக சீனா மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளாக மாறியது.
உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்க மிகப்பெரிய பொருளாதார தளத்தைக் கொண்ட இரு தரப்பும் (சீனா மற்றும் ஆசியான்) விரிவான பிராந்திய பொருளாதார கூட்டாண்மை (ஆர்.சி.இ.பி.) கையெழுத்திட்டன. சீனா-ஆசியான் ஒத்துழைப்பில் ஒரு வரலாற்று மைல் கல்லாக இது அமைந்தது.
2021ஆம் ஆண்டில் சீனாவும், ஆசியான் கூட்டமைப்பும் தங்களது உரையாடல் உறவுகளின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட உள்ளன. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை மேம்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பெய்ஜிங் புதிய வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.