நிலவில் 1969ஆம் ஆண்டு முதல்முதலில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து பாறைகள், மணல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். பின்னர், 1976இல் ரஷ்யா ‘லூனா 24’ என்ற ஆள் இல்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி 170 கிராம் கற்களை அங்கிருந்து கொண்டு வந்தது. இந்த கற்கள் மூலம் நிலவின் நிலப்பரப்பு தன்மை, தோற்றம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், தற்போது மூன்றாவது நாடாக சீனா ஆள் இல்லாத விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. ‘சேஞ்ச்-5’ என்ற பெயர் கொண்ட இந்த விண்கலம் பெரிய ராக்கெட் மூலம் நேற்று ஹைனானில் உள்ள வென்சாங் விண்கலம் மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவில் இருந்து கற்களை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய இருக்கிறது. இந்த விண்கலம் மூலம் இதுவரை யாரும் செல்லாத “ஓடிஷன் ஆப் ஸ்டார்ஸ்” என்ற பகுதியில் இருந்து 2 கிலோ பாறை கற்களை பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.