உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் ஐந்து லட்சத்தை தாண்டுகிறது. சீனா மூலம்தான் கரோனா தொற்று பரவியது எனக் கூறப்பட்டுவரும் நிலையில், தற்போது கரோனா வைரஸ் தடுப்பூசியும் சந்தைக்கு கொண்டுவருவதற்கு சீனா தீவிரமாகப் பணியாற்றிவருகிறது. தடுப்பூசி பணிகளைத் துரிதப்படுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி வெளியிடும் பணியைத் துரிதப்படுத்தும் சீனா: குவியும் கொள்முதல் ஆணைகள்! - 4 நிறுவனங்கள் ‘தயாரித்த 5 தடுப்பூசி
கரோனா தடுப்பூசியை விநியோகம் செய்திட சீன நிறுவனங்கள் முடிவுசெய்துள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்கு பல மாகாண அரசுகள் ஆர்டர்கள் செய்துவருகின்றன.
அதன்படி, தற்போது 4 நிறுவனங்கள் தயாரித்த 5 தடுப்பூசிகளானது, ரஷியா, எகிப்து, மெக்சிகோ உள்பட 12-க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகிவருகின்றன. இது குறித்து தகவலறிந்த பல மாகாண அரசுகள், தடுப்பூசிகளுக்காக கொள்முதல் ஆணைகளைக் குவித்துவருகின்றன. இருப்பினும், நாட்டின் 140 கோடி மக்களை தடுப்பூசி எவ்வாறு சென்று அடையப்போகிறது எனச் சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறவில்லை.
மேலும், சீன நிறுவனமான சினோவாக், தடுப்பூசியின் 1.2 மில்லியன் டோஸ் இந்தோனேசியாவுக்கு வந்ததாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, கரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கியவர்கள் சோதனைகளை விரைவுப்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.