தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவின் ‘லாங் மார்ச் - 5’ ராக்கெட் நிலவுக்கு செல்ல தயார்!

சீனா 2003ஆம் ஆண்டு நிலாவுக்கு மனிதனை அனுப்பியது. இதன்மூலம் நிலாவுக்கு மனிதனை அனுப்பிய மூன்றாவது தேசம் என்ற பெருமையைப் பெற்றது. தற்போது செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் ஏவும் திட்டம் ஒன்றும் சீனாவின் கைவசம் உள்ளது.

lunar mission
lunar mission

By

Published : Nov 17, 2020, 5:28 PM IST

பெய்ஜிங்: நிலாவில் இருந்து ஆராய்ச்சிக்கான பொருட்களை எடுத்துவர, 40 ஆண்டுகளில் முதன்முறையாக சீனா ராக்கெட்டை விண்ணில் செலுத்தவுள்ளது.

நிலாவில் இருந்து ஆராய்ச்சிக்கான பொருட்களை எடுத்துவரவுள்ள ‘லாங் மார்ச் - 5’ ராக்கெட் ஏவுதளத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்னும் சில தினங்களில் இது விண்ணில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் நிலாவில் ஒரு லேண்டர் இறக்கப்படும். அது அங்கு 7 அடிக்கு துளையிட்டு பாறைகள் உள்ளிட்ட பொருட்களை ஆராய்ச்சிக்காக கொண்டுவரும் என கூறப்படுகிறது. இந்த ஆராய்ச்சி விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கு அமெரிக்க சட்டம் தடை விதித்திருப்பதால், இந்த திட்டத்தில் நாசா பணியாற்றவில்லை. லாங் மார்ச் - 5 ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டு தோல்வியை தழுவியது. சீனாவின் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்றி அதை இம்முறை வெற்றிபெறச் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சீனா 2003ஆம் ஆண்டு நிலாவுக்கு மனிதனை அனுப்பியது. இதன்மூலம் நிலாவுக்கு மனிதனை அனுப்பிய மூன்றாவது தேசம் என்ற பெருமையைப் பெற்றது. தற்போது செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் ஏவும் திட்டம் ஒன்றும் சீனாவின் கைவசம் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details