பெய்ஜிங்:உலக நாடுகளில் மொத்த சொத்து மதிப்பு, கடந்த 20 ஆண்டுகளில் சுமார் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
இதில் அமெரிக்காவைப் பின்தள்ளி சீனா உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடாக உள்ளதென ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் மொத்த வருமானம் குறித்து McKinsey & Co நிறுவனம் நடத்திய ஆய்வில், இரண்டாயிரமாவது ஆண்டில் 156 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த சொத்து மதிப்பு, 2020ஆம் ஆண்டில் 514 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டது.
மேலும் இரண்டாயிரமாவது ஆண்டில் வெறும் ஏழு ட்ரில்லியனாக இருந்த சீனாவின் சொத்து மதிப்பு, 2020ஆம் ஆண்டில் 120 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பு 90 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இதில் சீனா மற்றும் அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கு சொத்துகளை பத்து விழுக்காடு பேர் மட்டுமே வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக நாடுகளில் வைத்துள்ள சொத்துகளில் 68 விழுக்காடு ரியல் எஸ்டேட் துறையில் உள்ளதாகவும், ரியல் எஸ்டேட் சரிந்தால் மூன்றில் ஒரு பங்கு சொத்து மதிப்பு அழிந்து விடும் என்றும் McKinsey & Co நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏஒய்.4.2 கரோனா வைரஸ்... மீண்டும் ஊரடங்கு!