டெல்லி:இந்தியாவிற்கு இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நாடு கடந்த திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
டெல்லியில் உள்ள திபெத்திய மாளிகையின் இயக்குநர், மதகுரு தலாய்லாமாவின் உதவியாளர், நாடு கடந்த திபெத்திய அரசாங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் தனிப்பட்ட சந்திப்பையும் பிளிங்கன் நடத்தினார். இச்சம்பவம் சீனாவை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பிற்கு கண்டனம் தெரிவித்து சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் லிஜியன் ஜாவோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "திபெத்திய விவகாரங்கள் முழுவதும் சீனாவில் உள்விவகாரங்கள். அதில், வெளிநாட்டுத் தலையீடுகளை ஏற்கமுடியாது.