தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை அனுப்பிய சீனா! - வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள்

பெய்ஜிங்: வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்திலிருந்து புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஒன்றை சீனா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்

By

Published : Aug 23, 2020, 3:34 PM IST

வடமேற்கு சீனாவில் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையம் உள்ளது. இங்கிருந்து சீன விஞ்ஞானிகள் புதிதாக ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஒன்றை காலை 10.27 மணியளவில் வெற்றிகரமாக செலுத்தினர். இந்த காஃபென்-9 05 (Gaofen-9 05) என்ற செயற்கைக்கோளை லாங் மார்ச் -2 டி கேரியர் ராக்கெட் மூலம் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்டது.

இந்த ராக்கெட்டில் மேலும் ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் டெஸ்ட் செயற்கைக்கோள், டைன்டுவோ - 5 என்ற செயற்கைக்கோளும் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஏவுதலில்தான் லாங் மார்ச் ராக்கெட் 343ஆவது முறையாக விண்ணிற்கு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details