டியான்ஹூ 11 - 01 என்ற பெயரிப்பட்டுள்ள இரண்டு செயற்கைக்கோள்கள் வடக்கு சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள தையூன் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்த உள்ளூர் நேரப்படி சரியாக காலை 6.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. லாங் மார்ச் 4 பி ரக ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.
அறிவியல் ஆராய்ச்சிக்காக 2 செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் ஏவியது! - scientific
பெய்ஜிங்: அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக இரண்டு செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
அறிவியல் ஆராய்ச்சிக்காக 2 செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் ஏவியது
அறிவியல் ஆராய்ச்சி, நில ஆதார ஆய்வு, பவுயியல் ஆய்வு, வரைப்படம் ஆகியவற்றிற்கு இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லாங் மார்ச் ரக ராக்கெட்டின் 303 வது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.