தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைக்கு தேவை - பொறுமை..! - இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

இந்தியா-சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னையை தீர்க்க இருதரப்பினரும் மிகுந்த பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என சுரேஷ் பாஃப்னா கூறுகிறார். இதுகுறித்து ஈடிவி பாரத்துக்கு அவர் எழுதிய கட்டுரை இதோ...

india china border dispute, இந்தியா சீனா எல்லைப் பிரச்னை
india china border dispute

By

Published : Dec 19, 2019, 3:48 AM IST

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், இதுவரை எந்தவொரு உறுதியான முடிவுகளையும் தரவில்லை. ஆனால் எந்தவொரு நேர்மறையான முடிவை அடையலாம் என்ற நம்பிக்கையை, இரு தரப்பினரும் விட்டுவிடவில்லை. எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதிகள் இடையிலான 22-வது சந்திப்பு, தாஜ்மகாலின் அமைவிடமான ஆக்ராவில் நடைபெறவுள்ளது. இரு சிறப்பு பிரதிநிதிகளான இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சரும், அந்நாட்டு ஆலோசகருமான வாங் யி ஆகியோருக்கு இடையே டிசம்பர் 21-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இது, கள யதார்த்தத்தின் அடிப்படையில் எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பது தவறல்ல.

இந்தியா - சீன சிறப்பு பிரதிநிதிகள் இடையே நடந்த, கடந்த 21-ஆம் சுற்று பேச்சுவார்த்தைகளில் இருந்து, எல்லைப் பிரச்னையை தீர்ப்பது மிகவும் கடினமானது ஒன்றென்பது மட்டும் தெளிவாகிறது. 2003ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், ஹூ ஜிண்டாவோ இடையே நடைபெற்ற உச்சி மாநாட்டில், எல்லைப் பிரச்னையைத் தீர்க்க, சிறப்புப் பிரதிநிதிகள் அளவில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதே சுற்று பேச்சுவார்த்தைகளில் மட்டுமே பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யப்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், வென் ஜியாபாவோ இடையேயான உச்சி மாநாடு, பேச்சுவார்த்தைக்கான அரசியல் அளவுருக்கள், வழிகாட்டுதல் கொள்கைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, எல்லைப் பிரச்னையைத் தீர்க்க முக்கியப் புவியியல் அம்சங்கள், மக்கள் குடியேற்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பரஸ்பர ஒப்பந்தத்தால் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தீர்மானிக்கப்படும் என்று இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முறைசாரா ஒப்பந்தம் இருந்தது; ஆனால் சீக்கிரமே இந்த ஒப்பந்தத்தில் இருந்து சீனா பின்வாங்கியது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை ( Line of Actual Control) நிர்ணயிக்காததால், இரு நாட்டு படைகளுக்கு இடையே மோதல் எழுவதற்கான பல சூழ்நிலைகள் காணப்படுகின்றன.

1962 சீனா-இந்தியா போரில், இந்தியா உரிமை கொண்டாடும் அக்சாய் சீனாவின் 34 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பகுதியை சீனா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தது. அதே போன்று, கிழக்கு பிராந்தியத்தில், அருணாச்சலப் பிரதேசம் முழுவதையும் லோயர் திபெத் என்று சீனா உரமை கொண்டாடி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இப்பகுதிகளில் இருந்த உள்ளூர் ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை சீனா ஏற்கவில்லை.

சீனா, 14 நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது; அதில் பெரும்பாலான நாடுகளுடன் அதற்கு எல்லை மோதல்கள் இருந்தன. எல்லைப் பிரச்னைக்காக அன்றைய சோவியத் யூனியன், வியட்நாமுடன் சீனா போரிட்டத்து. தமது பொருளாதார, ராணுவ வலிமையால், இந்தியா, பூட்டானைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுடனும் எல்லை மோதல்களை சீனா தீர்த்துள்ளது. இந்த எல்லை ஒப்பந்தங்கள் அனைத்துமே, வெளிப்படையாக சீனாவின் நலனுக்கு உகந்த வகையிலேயே செய்து கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க : அமெரிக்கா - சீனா வர்த்தக உடன்பாடு நம்பிக்கையளிக்கிறது!

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீரின் பெரும் பகுதியை, சீனாவுக்கே அது ஒப்புக் கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம், இந்தியப் பொருளாதாரத்தை விட ஐந்து மடங்கு பெரியதாக இருந்தாலும், தனது எல்லை நலன்களில் இந்தியா சமரசம் செய்து கொள்ளவில்லை. டோக்லாம் பகுதியில் பூடானுக்கு ஆதரவாக இந்தியா ராணுவ ரீதியாக தலையீட்டபோது, இந்தியாவுக்கு சீனா போர் மிரட்டல் விடுத்தது. ஆனால், ராணுவ வலிமை, பொருளாதார பலத்தை நிரூபிப்பதன் மூலம் எல்லைப் பிரச்னையில் இந்தியாவை வீழ்த்துவது சாத்தியமில்லை என்பதை சீனா தற்போது உணர்ந்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டு (LOC) கோடு தொடர்பான பிரச்னைகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன; மறுபுறம், சீனாவுடன் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், கடந்த 57 ஆண்டுகளில் சீன-இந்தியா எல்லையில் ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடைபெற்றதில்லை.

இதன் மூலம், இவ்விரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளை அமைதிப் பேச்சுவார்த்தை வாயிலாக தீர்க்கவே விரும்புகின்றன என்பதற்கு இந்த சான்றுகளே போதுமானவை. இந்தியா- சீனா எல்லைப் பிரச்னையானது, அவற்றுக்கு இடையிலான வர்த்தகம், பிற உறவுகளில் எந்தவிதமான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகம் இப்போது 80 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே பேச்சுவார்த்தை என்ற செயல்முறை நீண்ட காலமாக நடந்து வருகிறது; அவை இன்னும் தொடர்கின்றன. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக சீனா நடந்து கொண்ட முறை, இந்தியா மீது அதிக அழுத்தங்களை தொடர்ந்து கொடுப்பதற்கான ஒரு உத்தியாக சீனா பின்பற்றுகிறது என்பது தெளிவாகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பிற வலிமையான நாடுகளுடன் ராஜதந்திர அளவில் தனது ராணுவ உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், சீனாவின் உத்திகளை முறியடிக்க இந்தியா முயன்றுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை உடனடியாக எதிர்க்காலத்தில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதல்ல. வெளிப்படையாக இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தமும், பரிவர்த்தனை அடிப்படையில் இருக்கும். இந்த ஒப்பந்தம், பொது மட்டத்தில் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வகையில், இரு நாடுகளுக்குள்ளும் உருவாக்கப்பட வேண்டும்.

இரு நாடுகளின் ராணுவ மோதல்களை தடுக்க, சீனா உண்மையான கட்டுப்பாட்டு கோட்டை உடனடியாக ஏற்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. டோக்லாம் போன்ற சம்பவங்கள் இரு நாட்டு மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளன; அவை பேச்சுவார்த்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வாரம் ஆக்ராவில் நடைபெறவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவொரு உறுதியான முடிவையும் எதிர்பார்ப்பது சரியல்ல. கடந்த சில மாதங்களாக, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பதற்றத்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கி இருந்தது. எல்லை தகராறு தீர்க்கப்பட்டால் மட்டுமே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஒரு புதிய உச்சத்தை தொட முடியும் என்பதை இரு தரப்புமே உணர்ந்துள்ளன.

கடந்த பல மாதங்களாக அமெரிக்காவுடன் நீடித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலையை நிறுத்திவிட்டன அல்லது சீனாவில் தங்கள் வணிகத்தை குறைத்துள்ளன. வர்த்தகம், முதலீட்டைப் பொறுத்தவரை, சீன நிறுவனங்கள் இந்தியாவை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதுகின்றன. இந்தியாவுக்கு எதிரான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை தீர்க்க சீனா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. இந்தியா - சீனா இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். சீன விலை வேறுபாடுகளை சர்ச்சையாக மாற்ற, இந்தியாவின் விதிமுறைகள் அனுமதிக்கக்கூடாது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தீர்மானிக்கப்படும் வரை, பல சந்தர்ப்பங்களில் மோதல் நிலைமை ஏற்படும். இந்த மோதல்களைத் தடுக்க, இரு நாடுகளும் உருவாக்கிய அமைப்பு, இதுவரை வெற்றிகரமாகவே இருந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலமே, பிரச்னைகளுக்கு தீர்வு சாத்தியமாகும். எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதில் இரு நாடுகளும் மிகுந்த பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

இதையும் படிங்க :பிரிட்டன் பொதுத்தேர்தலும் அந்நாட்டின் எதிர்காலமும்

ABOUT THE AUTHOR

...view details