தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அருணாசலப் பிரதேசத்தை தன்நாட்டு வரைபடத்தில் சேர்த்துக்கொண்ட சீனா - கரோனா பாதிப்பு சீனா

டெல்லி: இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் பகுதிகளை சீனா தன்நாட்டுப் பகுதியாக வரைபடத்தில் சேர்த்துக்கொண்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

china
china

By

Published : Apr 21, 2020, 3:35 PM IST

Updated : Apr 21, 2020, 3:44 PM IST

சுதந்திரத்துக்குப்பின் இந்தியா - சீனா எல்லைப்பகுதிகள் மேக்மோகன் எல்லைக்கோடால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளை ஒட்டியுள்ள இந்த நீண்ட எல்லையைத் தாண்டி சீனா அவ்வப்போது அத்துமீறுவது வழக்கம்.

குறிப்பாக அருணாசலப் பிரதேச மாநிலத்தின் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறு நுழைந்து ஆக்கிரமிப்பு செய்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், கரோனா பாதிப்பால் உலக நாடுகள் சிக்கித் திணறிவரும் இந்த சூழலில் சீனா தன்நாட்டின் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

இந்த வரைபடத்தில் இந்தியாவின் மாநிலமான அருணாசலபிரதேசத்தின் பகுதிகளை தன் நாட்டின் பகுதியாக சேர்ந்து சீனா குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளும் எல்லைச் சிக்கல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி சமூகமான சூழல் நிலவும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் சீனா களமிறங்கியுள்ளது.

கரோனா பாதிப்பால் கலங்கும் சூழலுக்கு ஆளாக சீனாவின் அலட்சியப் போக்குதான் காரணம் என அந்நாட்டின் மீது உலக நாடுகள் அதிருப்தியில் உள்ளன. இந்தச் சூழலில் இந்தியாவைச் சீண்டும் விதமாக தற்போது சீனா தனது வரைபடத்தை மாற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கொரிய தீபகற்பத்தில் பரபரப்பு - உஷார் நிலையில் தென்கொரியா

Last Updated : Apr 21, 2020, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details