தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"ஹாங்காங் மக்கள் அகதிகளா?" - அமெரிக்காவின் மசோதாவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

பெய்ஜிங்: சீனாவுக்கு அஞ்சி அமெரிக்கா செல்லும் ஹாங்காங் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கும் வகையில் அமெரிக்கா இயற்றிய சட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

China hits out at US
China hits out at US

By

Published : Jul 3, 2020, 1:41 PM IST

பிரிட்டன் காலனி நாடாக இருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு முதல் சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்துவருகிறது. ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றை மட்டுமே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மற்ற அனைத்துத் துறைகளையும் மக்களால் ஹாங்காங் அரசே நிர்வகித்துவருகிறது. இருப்பினும், ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சீனா தொடர்ந்து பல்வேறு சட்டங்களை இயற்றுகிறது.

இந்நிலையில், ஹாங்காங் தேசியப் பாதுகாப்பு மசோதாவை சீன அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் ஹாங்காங் அரசியலமைப்பை புறம்தள்ளி, குறிப்பிட்ட சில வழக்குகளை நேரடியாக விசாரிக்கும் அதிகாரம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது ஹாங்காங்கின் தன்னாட்சியை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக ஹாங்காங் மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

முன்னாள் காலனி நாடு என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு, முப்பது லட்சம் ஹாங்காங்வாசிகள் பிரிட்டனின் வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை பெற தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.

மேலும், அவர்கள் பிரிட்டனில் தங்கி ஐந்து ஆண்டுகள் வரை வேலை செய்யவும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "பிரிட்டன் அரசு இதில் சீனாவின் நிலைப்பாட்டைப் புறக்கணித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட(ஹாங்காங்) மக்கள் பிரிட்டனில் தங்குவதற்கு ஒரு வழியை அறிவித்துள்ளது, அவர்கள் எங்களுக்கு அளித்த நிலைப்பாட்டை மீறும் வகையில் உள்ளது" என்றார்.

அதேபோல சீனா அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக அஞ்சி அமெரிக்கா செல்லும் ஹாங்காங்வாசிகளுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கும் வகையில் அமெரிக்கா புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவுக்கு சீனா கடும் அதிருப்தியையும் உறுதியான எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதாக லிஜியன் தெரிவித்தார்.

"அமெரிக்கா இது குறித்த மசோதாவை பரிசீலனை செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எதிர்வினைகள் எதிர்கொள்ள நேரிடும்" என்று எச்சரித்தார்.

ஆஸ்திரேலியாவும் இதேபோல ஹாங்காங்வாசிகளுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்குவது குறித்து அலோசித்துவருவதை உடனயாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீனாவில் உருவான புதிய வைரஸ்!

ABOUT THE AUTHOR

...view details